tamilnadu

img

மீண்டும் அடிவாங்கிய பங்குச் சந்தைகள்

புதுதில்லி:
பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திப்பது தொடர் கதையாகி விட்டது. முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துவருகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால், ஆட்டோ மொபைல் தொழிற்துறை உட்பட நாட்டின் அனைத்து துறைகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஜிடிபி 5 சதவிகிதம் என்ற அளவிற்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஏற்றுமதி பாதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கத்து வங்கி விட்டது. இவற்றின் காரணமாக, தப்பித்தால் போதும் என்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 16-ஆம் தேதி, மும்பை பங்குச்சந்தை குறியீடான ‘சென்செக்ஸ்’ 262 புள்ளிகள் சரிந்து37 ஆயிரத்து 123 புள்ளிகளுக்கு போனது. தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 3 என்ற புள்ளிகளில் நிலைகொண்டது. செப்டம்பர் 17-ஆம் தேதியும் இரண்டாவது நாளாக இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் அடிவாங்கின. முதல்நாளில் 37 ஆயிரத்து 123 புள்ளிகளில் நிலை கொண்டிருந்த மும்பை பங்குச் சந்தை, செவ்வாயன்று 642 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 481 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இதேபோல 11 ஆயிரத்து 3 புள்ளிகளில் நிலைகொண்டிருந்த தேசியப் பங்குச் சந்தை, 186 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரத்து 817 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.எனினும் செப்டம்பர் 18-ஆம் தேதி நிலைமை, அவ்வளவு மோசமடையவில்லை. இது சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஆனால், வியாழனன்று மும்பை பங்குச் சந்தை மீண்டும் 470 புள்ளிகள் வரை சரிந்து, கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. வியாழனன்று காலை 36 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், கடுமையான முறையில் சரிந்து, 36 ஆயிரத்து 93 புள்ளிகளுக்கு வீழ்ச்சி அடைந்தது.அதேபோல, 10 ஆயிரத்து 845 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய ‘நிப்டி’யும் 135 புள்ளிகள் குறைந்து, 10 ஆயிரத்து 704 புள்ளிகளாக சரிந்தது.

;